உள்நாட்டு செய்திகள்

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு, நடந்தது என்ன ?

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் வான் ஒன்றினை ஓட்டிச் சென்ற
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் ஃபயாஸ் என்ற சிறுவன் மீது
பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த சிறுவன் உயிரிழந்திருந்தான்.

உயிரிழந்த குறித்த 17 வயது சிறுவனின் உடற்கூற்று பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ள
நிலையில், துப்பாக்கித் தோட்டா சிறுவனின் நெற்றிப் பகுதியில் பட்டுத் தலையைத் துளைத்துச்
சென்றமையே மரணத்திற்குக் காரணம் என அதில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உடற்கூற்றுப் பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் சட்ட வைத்திய
அதிகாரி எம். மயூரதன் முன்னிலையில் நடைபெற்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button