விளையாட்டுச் செய்திகள்

பிரெஞ்சு ஓபன்: முதன்முறையாக காலிறுதிக்கு தகுதி பெற்ற அன்னா கலின்ஸ்காயா

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில், ரஷ்ய வீராங்கனை அன்னா கலின்ஸ்கயா தனது கெரியரில் முதன்முறையாக பிரெஞ்சு ஓபன் கால் இறுதிக்குத் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளார்.

நடைபெற்ற 4ஆவது சுற்று போட்டியில் சகநாட்டு வீராங்கனை அனஸ்தாசியா பொட்டாபோவாவை 6-4, 2-6, 7-6(7) என்ற செட் கணக்கில் போராடி வீழ்த்தினார்.

முதல் செட்டில் 1-4 என பின்தங்கியிருந்த கலின்ஸ்காயா, அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர்ந்து புள்ளிகளை குவித்து 6-4 என அந்த செட்டைக் கைப்பற்றினார்.

ஆனால் இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய பொடபோவா, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று போட்டியை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி செட் டை-பிரேக்கிற்கு சென்றது. டை-பிரேக்கில் கலின்ஸ்காயா வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button