இலங்கை பாகிஸ்தான் நட்புகள் மேலும் வலுப்பெறும் !

பாகிஸ்தான் உள்துறை மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுக்கான மத்திய அமைச்சர்
சையத் மொஹ்சின் ராசா நக்வியின் வருகையும், பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின்
வருகையும் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும்
வலுப்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (16) திங்கட் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சர் நக்வி மற்றும் வெளிநாட்டு
பாகிஸ்தானியர்கள் மற்றும் மனிதவள மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சர் சவுத்ரி சாலிக் ஹுசைன்
ஆகியோர் அடங்கிய தூதுக்குழுவை சந்தித்தபோது ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
இந்தியாவுக்கு எதிரான T20 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க வசதி செய்து கொடுத்ததற்காகவும்,
சம்மதிக்க வைத்ததற்காகவும் பாகிஸ்தான் பிரதமருக்கு ஜனாதிபதி திசாநாயக்க நன்றி தெரிவித்தார்.
மேலும், சமீபத்திய சூறாவளி டித்வா உட்பட கடினமான காலங்களில் இலங்கைக்கு பாகிஸ்தான்
அளித்த தொடர்ச்சியான ஆதரவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்தார்.



