வாகனப் பதிவு மோசடி, ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைது!

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் மிக (DMT) நீண்டகாலமாக
நடைபெற்று வந்த வாகனப் பதிவு முறைகேடுகள் குறித்து குற்றப்புலனாய்வுத்
திணைக்களத்தினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.
குறிப்பாக, சுங்கத் தீர்வைகள் செலுத்தப்படாமல் சட்டவிரோதமாக இறக்குமதி
செய்யப்பட்ட வாகனங்களை, போலி ஆவணங்கள் மூலம் திணைக்களத்தின்
தரவுத்தளத்தில் (Database) உட்படுத்தி பதிவு செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின்
பேரிலேயே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ள கமல் அமரசிங்கவிடம் தற்போது குற்றப்புலனாய்வுத்
திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை நிறைவடைந்த பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என
எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இதேபோன்ற குற்றச்சாட்டுகளுக்காக முன்னைய
ஆணையாளர் மற்றும் பல உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பதவியில் உள்ள ஆணையாளர் கைது
செய்யப்பட்டிருப்பது திணைக்கள மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




