உள்நாட்டு செய்திகள்
இலங்கையின் சுற்றுலாத்துறைக்கு பெப்ரவரி ஆரம்பத்தில் புதிய தொடக்கம் !

இலங்கையின் சுற்றுலாத் துறை புத்தாண்டில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது அதன்படி 2026 ஆம் ஆண்டின் முதல் ஏழு வாரங்களுக்குள் வெளிநாட்டு
சுற்றுலாப்பயணிகளின் வருகை 500,000 ஐ தாண்டியுள்ளது. ஜனவரி 1 முதல் பிப்ரவரி 22 வரை
505,751 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம்
(SLTDA) நேற்று செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலாவின் முதன்மை மூல சந்தையாக இந்தியா தொடர்ந்து உள்ளது,
இந்தக் காலகட்டத்தில் 89,277 சுற்றுலாப் பயணிகள் இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ளனர்.
இந்தியாவின் பின்னராக ஐக்கிய இராச்சியம், ரஷ்யா,ஜெர்மனி மற்றும் சீனா அடங்கும் எனவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.




