உள்நாட்டு செய்திகள்

இன்று மாலை நாட்டின் அதிக இடங்களில் மழைவீழ்ச்சி பதிவாகும் !

இன்று மாலை நாட்டின் அதிக இடங்களில் மழைவீழ்ச்சி பதிவாகும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது, அதனடிப்படையில் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button