வெளிநாட்டுச் செய்திகள்
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே தற்காலிக போர் நிறுத்தம்: ட்ரம்ப் தகவல்

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையேயான தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
லெபனானுக்குள் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, இஸ்ரேல் படைகள் ஊடுருவியுள்ள நிலையில், நெதன்யாகுவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இஸ்ரேல் படைகள் “பெய்ரூட்டுக்குச் செல்லாது என்றும், அங்கு சென்று கொண்டிருந்த படைகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன” என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டார்.
“அனைத்துவிதமான துப்பாக்கிச் சூடு தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்றும், இஸ்ரேல் அவர்களைத் தாக்காது, அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது” என ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.




