சாய் சுதர்சனுக்கு நீண்ட வாய்ப்பு கொடுப்போம்: தலைமை பயிற்சியாளர் கம்பீர்

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. நாளை முதல் டெஸ்ட் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், தலைமை பயிற்சியாளர் கம்பீர் இது தொடர்பாக கருத்து வெளியிடுகையில்,
“புஜாராவின் ஓய்வுக்கு பிறகு டெஸ்ட் துடுப்பாட்டத்தில் 3ஆவது வரிசையில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இது சரியானது அல்ல. முக்கியமான இந்த துடுப்பாட்ட வரிசைக்கு யாராவது ஒரு வீரரை தக்க வைத்துக் கொள்வது அவசியம். இந்த டெஸ்டில் தேவ்தத் படிக்கல் அல்லது சாய் சுதர்சன் ஆகியோரில் ஒருவர் 3ஆவது வரிசையில் விளையாடவுள்ளனர். யார் விளையாடினாலும் அவர்கள் ஓட்டங்களை குவிக்க வேண்டும். நாங்கள் சாய் சுதர்சனுக்கு நியாயமான மற்றும் நீண்ட வாய்ப்பு கொடுப்போம். 4-5 இன்னிங்ஸ்களுக்குப் பிறகு ஒரு வீரரை மதிப்பிட்டால், நம்மால் ஒரு அணியை உருவாக்க முடியாது”
கம்பீர் கூறிய விடயத்தை வைத்து பார்க்கும் போது நாளை 3ஆவது வரிசையில் சாய் சுதர்சன் களமிறங்குவது உறுதியாகியுள்ளது.




