விளையாட்டுச் செய்திகள்
உலக தரவரிசையில் 3வது இடத்திற்கு முன்னேறினார் ருமேஷ் தரங்க!

உலக தடகள சம்மேளனம் இன்று (10) வெளியிட்டுள்ள புதிய ஈட்டி எறிதல் தரவரிசையின்படி, இலங்கையின் ருமேஷ் தரங்க 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
அவர் 1324 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று இந்த இடத்தைப் பிடித்துள்ளார்.
இத்தரவரிசையில் ஜேர்மனி வீரர் ஒருவர் 1360 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளதோடு, 1326 புள்ளிகளைப் பெற்றுள்ள வீரர் இரண்டாம் இடத்தில் உள்ளார்.




