உள்நாட்டு செய்திகள்

புதிய ஆசிரியர்கள் சேர்ப்பு தொடர்பில் பிரதமர் !

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், ஆசிரியர் இடமாற்றங்கள்
தொடர்பான நீண்டகால பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் இந்த ஆண்டுக்குள் 23,000 க்கும் மேற்பட்ட
ஆசிரியர்களை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி 18 அன்று நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சர்கள்
ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். ஆட்சேர்ப்புகளுக்கு ஏற்கனவே
ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த செயல்முறையை முடிக்க நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button