உள்நாட்டு செய்திகள்
விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நேற்று (25) ஞாயிற்றுக்கிழமை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், விமானம் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட ஒரு பெரிய அளவிலான குஷ் மற்றும் ஹாஷிஸ் எனப்படும் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் கொட்டறமுல்ல பிரதேசத்தினைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.




