வெளிநாட்டுச் செய்திகள்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு !

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், ஈரானிலிருந்து வரும்
அச்சுறுத்தலைத் தடுக்க முன்கூட்டியே ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக
அறிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இஸ்ரேல் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு இருப்பதால்
மக்கள் பாதுகாப்பு இடங்களுக்கு அருகில் இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.



