வெளிநாட்டுச் செய்திகள்

ஈரான் இராணுவ தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கா, ஈரான் இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வர உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக இரு நாடுகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

முன்னதாக அமெரிக்காவின் MQ-1 என்ற அதிநவீன டிரோனை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இந்நிலையில் இன்று ஈரானின் கெருக் மற்றும் கெஷ்ம் தீவு பகுதிகளில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியள்ளது.

அங்கு ஈரானிய ரேடார் மற்றும் டிரோன் ஏவுதளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.

சர்வதேச வான்வெளியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு டிரோனை ஈரான் அத்துமீறிச் சுட்டதற்காகவே இந்த பதிலடித் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து குவைத் நாட்டில் அமெரிக்க இராணுவ தளத்தை குறிவைத்து இன்று அதிகாலை ஈரான், ஏவுகணை மற்றும் டிரோன்களை ஏவியுள்ளது.

இருப்பினும் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலாம் தங்கள் வான்வெளியில் நுழைந்த ஈரானின் ஏவுகணைகளையும் டிரோன்களையும் நடுவானிலேயே அழித்ததாக குவைட் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் பதிவில், “ஈரான் உண்மையிலேயே ஒரு ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது, அது அமெரிக்காவிற்கும் நம்முடன் இருப்பவர்களுக்கும் ஒரு நல்ல ஒப்பந்தமாக இருக்கும்.

அமைதியாகக் காத்திருந்து கவனியுங்கள், இறுதியில் எல்லாம் நன்றாக முடியும், எப்போதும் போல!” என்று பதிவிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button