உள்நாட்டு செய்திகள்

போலிக் கையொப்பத்தைப் பயன்படுத்தி ஊழியர்களுக்கு ஊதியம்

தான் கைது செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், ​​தனது கையொப்பத்தைப் போலியாக பயன்படுத்தி, சுமார் 625,000 ரூபா ஊதியத்தை 11 பிரதேச சபை ஊழியர்களுக்கு வழங்கியுள்ளதாக நுவரெலிய பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது கையொப்பத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நிதி மோசடி செய்யப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக, இன்று காலை (02) நுவரெலிய குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நுவரெலிய உதவி உள்ளூராட்சி ஆணையாளரிடம் எழுத்துப்பூர்வமாகப் முறைப்பாடு அளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்படி விடயத்தை வெளியிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button