மகளிர் T20 உலகக்கிண்ணம் – 12ஆம் திகதி தொடக்கம்

மகளிர் இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 12ஆம் திகதியன்று இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் ஆரம்பமாகவுள்ளது.
இது குறித்து இங்கிலாந்தில் நடந்த இதன் அறிமுகக் கூட்டத்தில், ஐ.சி.சி. தலைவர் ஜெய் ஷா கலந்து கொண்டு கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இக்கூட்டத்தில் பேசிய அவர், இந்த இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடர் மகளிர் கிரிக்கெட்டிற்கு ஒரு மைல்கல் எனவும் இதுவரை நடத்தப்பட்ட மகளிர் ரி20 உலகக் கோப்பை தொடர்களில் இது மிகவும் விறுவிறுப்பாக மற்றும் குறிக்கோளுடன் இருக்கும் என நம்புவதாக கூறினார்.
முன்னதாக இடம்பெற்ற இறுதிப் போட்டிகளில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து ஆகிய நான்கு அணிகள் மட்டுமே உலகக்கிண்ணத்தை வென்றுள்ளன.
இருப்பினும் இதுவரை இடம்பெற்ற இருபதுக்கு 20 உலக கோப்பையில் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கம் செலுதித்ய நிலையில் 2010 முதல் 2023 வரை நடைபெற்ற போட்டிகளில் இதுவரை ஆறு முறை கிண்ணத்தை கைப்பற்றி சாதனை செய்துள்ளது.
மேலும் முக்கியமாக 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் ஹெர்ட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
பெரும்பாலும் இறுதிப் போ ட்டிகளில் அவுஸ்திரேலியா அணி இடம்பெறுகிறது. ஆயினும் 2009 ஆம் ஆண்டு இறுதிப் போ ட்டியில் அவுஸ்திரேலிய அணியை தோற்கடித்து, இங்கிலாந்து மகளிர் அணி கிண்ணத்தை வென்றுள்ளது.
இந்நிலையில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, 50 ஓவர் உலகக் கிண்ணத்தைத் தொடர்ந்து இந்த இருபதுக்கு 20 கிண்ணத்தையும் வெல்லும் தீவிர பயிற்சியிலுள்ளதாக தெரியவந்துள்ளது.




