வெளிநாட்டுச் செய்திகள்

தென்னாபிரிக்காவில் துப்பாக்கிச்சூடு – 12 பேர் உயிரிழப்பு

தென்னாபிரிக்கா, ஜோகன்னஸ்பர்க் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மர்ம நபர்கள் நடத்திய இந்த தாக்குதலில் 9 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 10க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய குழுவினர் தாக்குதலை நடத்திவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சந்தேக நபர்களை பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button