வெளிநாட்டுச் செய்திகள்

சீனாவில் ஷவோலின் மடாலய முன்னாள் தலைமைத் துறவிக்கு 24 ஆண்டுகள் சிறை

உலகப் புகழ்பெற்ற சீனாவின் ஷவோலின் மடாலயத்தின் முன்னாள் தலைமைத் துறவியான ஷி யோங்சினுக்கு ஊழல் வழக்கில் 24 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பதவியைத் தவறாகப் பயன்படுத்துதல், நிதி கையாடல், லஞ்சம் வாங்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, சிறைத் தண்டனையுடன் 35 இலட்சம் யுவான் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1999 முதல் ஷவோலின் மடாலயத்தின் தலைமைத் துறவியாக இருந்த வந்த இவா், பௌத்த மதக் கோட்பாடுகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டாா்.

கி.பி. 495-இல் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஷவோலின் மடாலயம், சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள சாங் மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பல்லவ இளவரசா் மற்றும் தமிழ் துறவியுமான போதி தா்மருடன் தொடா்புடைய ‘ஜென்’ பௌத்த வழிபாட்டுத் தலமான இது, குங்ஃபு உள்ளிட்ட தற்காப்புக் கலைகளின் முதன்மை பயிற்சி மையமாகத் திகழ்கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button