உள்நாட்டு செய்திகள்

சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞன் பாம்பு தீண்டியதில் மரணம் !!

ஆலய வளாகத்தில் இடம்பெற்ற சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர் பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார், இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க் கிழமை கிளிநொச்சி-கல்மடு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தினைச் சேர்ந்த சிறீகாந்தன் கிருசிகன் என்பவரே உயிரிழந்துள்ளார், பாம்பு தீண்டியதும் குறித்த இளைஞனை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் மேலும் குறித்த இளைஞனின் உடல் மேலதிக உடற்கூராய்வுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button