மீண்டும் ஒரு புயலுக்கு வாய்ப்பு, பொதுமக்கள் அவதானம் !

நாட்டில் கடந்த ஆண்டின் இறுதியில் டித்வா என்ற புயல் காரணமாக பல இழப்புகள் நேர்ந்தது அதில் இருந்து நாடு மீண்டுவரும் வேளையில், மீண்டும் ஒரு தாழமுக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, அதனடிப்படையில் இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த தாழ் அமுக்கமானது நேற்று இரவு 11.30 மணியளவில் பொத்துவிலில் இருந்து தென்கிழக்காக சுமார் 490 கிலோமீற்றர் தொலைவில் காணப்படுகிறது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் இலங்கையின் கிழக்கு கரையை நோக்கி மேற்கு – வடமேற்குக் திசையினூடாக நகர்ந்து செல்லும். தொடர்ந்துவரும் 12 மணித்தியாலங்களில் மேலும் தீவிரமடைந்து சக்தி மிக்க தாழ் அமுக்கமாக வலுவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது,
இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் முகில் செறிந்து காணப்படும். வடக்கு , கிழக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது !




