உள்நாட்டு செய்திகள்
மட்டக்களப்பில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் !

பருவ மழை காரணமாக அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டின் முதல் வாரத்தில் 13 டெங்கு நோயளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேர் பாதிப்புக்குள்ளானதுடன் செங்கலடி பிரதேசத்தில் 03 பேரும், கிரான் மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 02 நபர்களும், வாகரை, வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் ஒருவருமாக மொத்தம் 13 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இதுவரையிலும் எந்தவொரு மரணமும் நிகழவில்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




