விளையாட்டுச் செய்திகள்
இலங்கை vs இங்கிலாந்து T20 தொடர் இன்று ஆரம்பம் !

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு 20 (T20) தொடர் இன்று (30) வெள்ளிக் கிழமை ஆரம்பமாகிறது.
பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இலங்கை அணி 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு, இங்கிலாந்து அணிக்கு எதிரான ரி20 தொடர் ஒன்றையோ அல்லது ஒரு தனிப்பட்ட போட்டியையோ இதுவரை வெற்றிகொண்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




