விளையாட்டுச் செய்திகள்

ஒரே தொடரில் கார்ல்சனை 2 முறை வீழ்த்திய பிரக்ஞானந்தா

நோர்வே செஸ் 2026 தொடரில் நேற்று (2) நடைபெற்ற எட்டாவது சுற்று ஆட்டத்தில், உலகத் தரம் வாய்ந்த நார்வேஜியன் ஜாம்பவான் மேக்னஸ் கார்ல்சனை இரண்டாவது முறையாக வீழ்த்தி இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா ஒரு வரலாற்றுச் சாதனையப் படைத்துள்ளார்.

இந்தத் தொடரின் முந்தைய சுற்றில் வெள்ளை நிறக் காய்களுடன் கார்ல்சனை வீழ்த்தியிருந்த பிரக்ஞானந்தா, நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் கருப்பு நிறக் காய்களுடன் விளையாடி மீண்டும் ஒருமுறை கார்ல்சனுக்கு அதிரடி அதிர்ச்சி கொடுத்து வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம், ஒரே தொடரில் மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய வரலாற்றுச் சாதனையாளரான இந்தியச் சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்தின் நீண்ட காலச் சாதனைப் பட்டியலை பிரக்ஞானந்தா தற்போது சமன் செய்துள்ளார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற லினாரஸ் சர்வதேச செஸ் தொடரில், கார்ல்சனை இரண்டு முறை ஆனந்த் வீழ்த்தியிருந்தார்.

செஸ் வரலாற்றிலேயே ஒரே தொடரில் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரக்ஞானந்தா, இந்த அசாத்திய வெற்றியின் மூலம் 12 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சாம்பியன் பட்டத்திற்கான ரேஸிலும் பலமாக நீடிக்கிறார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button