உள்நாட்டு செய்திகள்
நாட்டில் புத்த சாசனம் மற்றும் வளங்களைப் பாதுகாக்க முன்னாள் அமைச்சர் கோரிக்கை !

இலங்கையின் புத்த சாசனம் மீது விமர்சனக்கணை தொடுக்கும் அநுர அரசை விரட்டியடிக்க வேண்டும், இதற் குரிய நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார், அவர் மேலும் கூறுகையில், நாட்டில் புத்த சாசனம் மற்றும் வளங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் ஒற்றையாட்சியைப் பாதுகாக்க வேண்டும்.
ஒற்றையாட்சி பாதுகாக்கப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ஒரேயொரு ஜனாதிபதி வேட்பாளர் என்றால் அது நாமல் ராஜபக்ச தான். தமக்குரிய வாக்கு குறையும் என தெரிந்தும் அவர் அந்த அறிவிப்பை விடுத்தார்,
அப்படியான ஒருவர் ஜனாதிபதியானால் தான் இந்த நாட்டையும், பௌத்த சாசனத்தையும் பாதுகாக்க முடியும். அத்துடன் பௌத்த பிக்குகளுக்குரிய கௌரவமும் மீளக் கிடைக்கப்பெறும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.




