உள்நாட்டு செய்திகள்
கேலி, கிண்டல்கள் வேண்டாம், முதலில் நாட்டுக்கு நல்லது செய்யுங்கள் – சஜித்

இந்த அரசாங்கத்தில் பல முகாமைத்துவ சிக்கல்கள் உள்ளன, யாரும் டித்வா சூறாவளியைக் கேலிக்கையான விடயமாக எடுத்துக்கொள்ளக்கூடாது, இந்த கேலி கிண்டல்களான பார்வைகளால் தான் சுனாமியில் இருந்து எம்மால் அனுபவங்களைப் பெற முடியாது போனது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்,
இன்றும் கூட “ரேடார்” அமைப்புக்களை சரியான முறையில் நிறுவி அதற்கான முறையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த முடியாது தானே உள்ளது, இதனால் தான் எம்மால் இந்த சூறாவளியின் தாக்கத்தினால் இத்தனை உயிர்கள் பலியாகியது, ஆகவே இனியும் தேவையற்ற கேலிக்கைகள் இல்லாது செயற்படுங்கள் எனவும் நாட்டுக்கு நல்லது நடந்தால் நாமும் கைகொடுக்க தயாராக உள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார் !




