உள்நாட்டு செய்திகள்

பல திருட்டில் ஈடுபட்ட ஒருவர் பம்பலப்பிட்டியில் கைது !

பல்பலப்பிட்டியில் ‘ஐஸ்’ போதைப்பொருள் வைத்திருந்ததாக 32 வயது சந்தேக நபர்
கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குறித்த நபர் பல தொடர் திருட்டு சம்பவங்களிலும்
ஈடுபட்டுள்ளமை தொடர்பில் போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அடுத்தடுத்த விசாரணைகளில், பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்டி, பேலியகொட, தெமட்டகொட,
தலங்கம, கோதடுவ, மருதானை, குருந்துவத்த, மற்றும் வெலிகட உள்ளிட்ட பல காவல் பிரிவுகளில்
எட்டு மோட்டார் சைக்கிள் மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்களைத் திருடியது
தொடர்பில் அவருக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, விசாரணையின் போது பல
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மடிக்கணினிகள் உட்பட பிற பொருட்களை
போலீசார் மீட்டுள்ளனர், மேலும் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை
முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button