உள்நாட்டு செய்திகள்
பாடசாலைகளில் தற்காலிக ஆசிரியர் குடியிருப்புகள் !

தேயிலை மற்றும் ரப்பர் தோட்டப் பகுதிகளில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் 14 தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளுக்கு அருகாமையில், ஆசிரியர்கள் தங்குவதற்கான தற்காலிக குடியிருப்புகளை நிர்மாணிக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரிய சமர்ப்பித்த இந்த முன்மொழிவு, மத்திய, ஊவா, சபரகமுவ,
மேற்கு, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ள
தோட்டத் துறை பள்ளிகளில் மனித மற்றும் பௌதீக வளங்களை மேம்படுத்துவதை நோக்காக்கொண்டதாகும். மேலும் தொடர்ச்சியான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதும் மேற்படி திட்டத்தின் நோக்காகும் !




