விளையாட்டுச் செய்திகள்
பலத்த பாதுகாப்பில் கொழும்பு !

இன்று (15) இடம்பெறவுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையிலான
T20 உலகக்கிண்ண போட்டிக்காக கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், அதன்படி போக்குவரத்து,
வாகன நிறுத்துமிடங்கள், பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில்
அவதானம் செலுத்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் போட்டிக்கான
டிக்கெட் இல்லாதவர்கள் தயவு செய்து வீட்டில் இருந்து தொலைக்காட்சியில் பார்த்து
இரசிக்குமாறும் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அது போன்று போட்டி 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது அதற்காக பார்வையாளர்கள்
மைதானத்திற்கு 3 மணியிலிருந்தே உள்ளே வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




