உள்நாட்டு செய்திகள்
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து, புதிய சட்டம் !

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கான புதிய சட்டமூலத்தின்
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டமூலத்திற்கு
ஆதரவாக 154 வாக்குகளும், எதிராக 2 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து
செய்யும் சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்டது.




