வெளிநாட்டுச் செய்திகள்
மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கர்களை வெளியேற உத்தரவு !
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையில் இடம்பெறும் யுத்தத்தின் காரணமாக
மத்திய கிழக்கிலுள்ள அமெரிக்கர்களை வெளியேறுமாறு அமெரிக்கா அவசர அழைப்பு
விடுத்துள்ளது.தற்போது அப்பகுதியில் ஏற்பட்டுள்ள யுத்த சூழலை கருதியே இந்த அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பஹ்ரைன், எகிப்து, ஈரான்,
ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவூதி அரேபியா,
சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப்
பிரஜைகளையே வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




