விளையாட்டுச் செய்திகள்

ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது குஜராத்

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான 2 ஆவது தகுதிச் சுற்று ஆட்டத்தில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் வரும் மே 31 திகதி ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்ள குஜராத் தகுதி பெற்றுள்ளது.

முல்லன்பூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, வைபவ் சூர்யவன்சியின் அதிரடியான 96 ஓட்டங்கள் மற்றும் டோனோவன் பெரேராவின் இறுதிநேர அதிரடி உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ஓட்டங்களைக் பெற்றது.

இதனையடுத்து 215 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் சிறப்பான அடித்தளமிட்டனர்.

இறுதிவரை அதிரடியைத் தொடர்ந்த குஜராத் அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 219 ஓட்டங்களைப் பெற்று, வெற்றி பெற்றது.

தோல்வியடைந்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி இந்தத் தொடரிலிருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button