உள்நாட்டு செய்திகள்

கிணற்றிலிருந்து சடலமொன்று மீட்பு

மாவத்தகம, பரகஹதெனிய பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ள, பயன்படுத்தப்படாத பாழடைந்த கிணறு ஒன்றிற்குள் இருந்தே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் உயிரிழந்தவர் மாவத்தகம, வேவுட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம் மீதான நீதவான் விசாரணைக்காக சம்பவ இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், மாவத்தகம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button