கட்டார் – சுவிட்சர்லாந்து போட்டி சமநிலையில் நிறைவு

2026 ஃபிஃபா உலகக் கிண்ண காற்பந்து தொடரின் குழுநிலைப் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அதன்படி, குழு ‘பி’ பிரிவில் இன்று நடைபெற்ற கட்டார் மற்றும் சுவிட்சர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
போட்டியின் ஆரம்பம் முதலே சுவிட்சர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, அந்த அணியின் நட்சத்திர வீரர் Breel Embolo அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை 1-0 என முன்னிலைப்படுத்தினார்.
அதன் பின், ஆட்டம் சுவிட்சர்லாந்தின் வசமே இருந்தது. ஆனால், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் (90+4′ நிமிடத்தில்) சுவிட்சர்லாந்து அணியின் Miro Muheim எதிர்பாராதவிதமாக அடித்த சுயகோல் கட்டார் அணிக்கு சாதகமாக அமைந்தது. இதன் மூலம் கட்டார் அணி அதிர்ஷ்டவசமாக போட்டியை 1-1 என சமன் செய்தது.




