உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கட்டண மீட்டர்களைப் பயன்படுத்தி இயக்கப்படும் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களிலுள்ள முச்சக்கர வண்டிகளுக்கான முதலாவது கிலோமீற்றருக்கான கட்டணத்தை 130 ரூபாய் வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவை மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் விலைக்கட்டுப்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கத்தின் முதன்மைச் செயலாளர் எல்.ரோஹண பெரேரா தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button