உள்நாட்டு செய்திகள்
பலாங்கொடை கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி !

அண்மையில் நாட்டில் அதிகமாக பேசப்பட்ட விடயங்களில் திருகோணமலை சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம் முக்கியமானது, இது தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி கஜநாயக்க தெரிவித்துள்ளார், சுகயீனம் காரணமாக பரிசோதனை ஒன்றுக்காகவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதுபோன்று கைதான குறித்த பலாங்கொடை கஸ்ஸப தேரர் உட்பட 6 பேர் நீதிமன்ற உத்தரவின் கீழ் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



