உள்நாட்டு செய்திகள்

லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான விற்பனை வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக கிடைத்துள்ள நிதி வலிமையைக் கொண்டு, நுகர்வோருக்கு இந்த நிவாரணத்தை வழங்க முடிந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது நடைமுறையிலுள்ள விலை விபரங்கள் வருமாறு:

  • 12.5 கிலோகிராம் (kg) – 4,765.00 ரூபா
  • 5 கிலோகிராம் (kg) – 1,910.00 ரூபா
  • 2.3 கிலோகிராம் (kg) – 890.00 ரூபா

இந்த விலைகள் மாற்றமின்றி தொடர்ந்தும் பேணப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button