உள்நாட்டு செய்திகள்
நாட்டில் இன்றும் பல இடங்களில் பலத்த மழைவீழ்ச்சி !

நாட்டின் கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பெலன்னறுவை மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அது போன்று நாட்டின் பெரும்பாலான இடங்களில் இன்றும் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.




