உள்நாட்டு செய்திகள்

காலி மற்றும் களுத்துறையில் நீர்வெட்டு

களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (10) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய களுத்துறை, வாதுவ, மத்துகம, பேருவளை, அளுத்கமை, பயாகல ஆகிய பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் நாளை காலை 8.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை இடைநிறுத்தப்படவுள்ளது.

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின் விநியோகம் தடைப்படுவதன் காரணமாகவே இந்த நீர் விநியோகத் தடை ஏற்படுவதாக நீர் வழங்கல் சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, காலி மாநகரசபை அதிகாரப் பிரதேசத்திற்கு நாளை 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்தச் சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, நாளை (10) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 14 மணித்தியாலங்களுக்கு குறித்த மாநகரசபை அதிகாரப் பிரதேசத்தில் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button