உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற விவாதத்திற்கு நாம் தயார் – அரசு

கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக பல்வேறுபட்ட எதிர்ப்புகளை எதிர்க்கட்சி உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துவருகின்றனர், இந் நிலையில் இது தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் ஜனவரி 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயார் என அமைச்சரவை பேச்சாளர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் இதுவரை இடம்பெற்றுள்ள விடயங்கள் மற்றும் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள விடயங்கள் குறித்து பெருமளவான தகவல்களைத் தெளிவுபடுத்திக்கொள்ள இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் ஒரு சந்தர்ப்பமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button