உள்நாட்டு செய்திகள்
நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நொச்சியாகம, தழுவ முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் 18 மற்றும் 19 வயதுடைய இரண்டு இளம் பெண்களும், 24 வயதுடைய இளைஞர் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இன்று (06) மாலை 5:30 மணியளவில் இந்த அனர்த்தம் சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரும் புத்தளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நொச்சியாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




