உள்நாட்டு செய்திகள்

பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள்

பண்டாரவளை பிரதேச செயலகத்திற்குள் சிலர் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த ஆவணங்களை நாசம் செய்துள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (07) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அங்கு நுழைந்த நபர்கள், பிரதேச செயலகத்தின் மூன்று மாடிகளிலும் இருந்த ஆவணங்களையும் கலைத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button