உள்நாட்டு செய்திகள்
மழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை !

இன்று (05) மாலை 3.30 மணியளவில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடைவதால் ஜனவரி 08ஆம் திகதி முதல் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது, இதன்காரணமாக அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.



