ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி – ட்ரம்ப் இருதரப்பு பேச்சுவார்த்தை

பிரான்சில் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இந்த பேச்சுவார்தையானது, எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியபடி, உத்தியோகப்பூர்வ மதிய உணவு நிகழ்வுக்கு முன்பாக நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தொழில்நுட்பம், முதலீட்டுப் பங்களிப்புகள் உலகளாவிய பாதுகாப்பு சவால்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் என இரு நாடுகளுக்கும் பொதுவான முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளன.
தொடர்ந்து, பிரதமர் மோடி பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள பயணத்தில் இன்று (14) பிரான்சின் நைஸ் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகின்றார்.
இன்று (14) முதல் 16 ஸ்லோவாக்கியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அத்துடன் எதிர்வரும் 16ஆம் திகதி மீண்டும் பிரான்சின் ஏவியான் நகருக்குத் திரும்பி, இரண்டு நாட்கள் நடைபெறும் ஜி-7 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று உரையாற்றுவார்.
மேலும், எதிர்வரும் 18 – 19ஆம் திகதிகளில் இறுதிக்கட்டமாக பாரிஸ் நகரில் நடக்கும் ‘விவாடெக்’ தொழில்நுட்ப மாநாட்டில் ஜனாதிபதி மேக்ரானுடன் இணைந்து பங்கேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.




