உள்நாட்டு செய்திகள்
வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு

காலி – மாத்தறை பிரதான வீதியின் வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வீதியைக் கடக்க முயன்ற போது, தனியார் பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த பெண் எம்பிலிபிட்டிய, கட்டுவன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் ஆவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




