உள்நாட்டு செய்திகள்

கிரியெல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு

இங்கிரிய வீதியின் கிரியெல்ல, மாட்டுவாகல முதுன்கொடுவ பகுதியில் இன்று (03) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது, ஒரு தரப்பைச் சேர்ந்த நபர் ஒருவர் வானத்தை நோக்கிச் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைத்துப்பாக்கி ஒன்றின் ஒன்றின் மூலமே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், இதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

எவ்வாறாயினும், இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகக் காயமடைந்த நபர் ஒருவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கிரியெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றொரு சந்தேகநபரைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button