உள்நாட்டு செய்திகள்
போதைப்பொருட்களுடன் பெண் உட்பட நான்கு பேர் கைது !

அஹுங்கல்ல மற்றும் அம்பலாங்கொட ஆகிய பகுதிகளில் 50 கோடி ரூபாவிற்கும் அதிக
பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட நான்கு
சந்தேகநபர்களை பொலிஸார் நேற்று வெள்ளிக் கிழமை (27) மாலை கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேகநபர்களிடம் இருந்து 13 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளும், 14 கிலோ கிராம் ஹெரோயினும்
கைப்பற்றப்பட்டதாக தென் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்
கித்சிறி ஜயலத் தெரிவித்தார். மேலும், இவர்களிடமிருந்து 9 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கிகளுக்கு
பயன்படுத்தப்படும் 30 தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன, மேலும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




