உள்நாட்டு செய்திகள்

யாழில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை விற்பனை, ஒருவர் கைது !

யாழ்ப்பாணத்தில் உள்ள ஐந்து சந்தி பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 3000 போதை மாத்திரைகளுடன் 27 வயதுடைய இளைஞன் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைப்பற்றப்பட்ட மாத்திரைகளின் சந்தைப் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது,

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து இந்த போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக யாழ். மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சந்தேகநபரை யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button