உள்நாட்டு செய்திகள்
லொறி மோதியதில் 11 வயது சிறுமி மரணம் !

11 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வீதியோரமாக சென்று கொண்டிருக்கும் போது லொறி
மோதியதில் மரணமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர், குறித்த சம்பவம் அனுராதபுரத்தில்
கடந்த வியாழக் கிழமை (6) அன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த காயங்களுடன் குறித்த சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகீச்சை அளிக்கும்
போதே உயிர் பிரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.




