உள்நாட்டு செய்திகள்

இலங்கை பெண் ஒருவர் இந்தியாவில் கொலை

சென்னை கோயம்பேட்டில் காரால் மோதி இலங்கை பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்த 18 வயதுடைய யான்சி என்ற இளம்பெண், இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கத்தின் அடிப்படையில் சென்னை வந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டுக்குப் பின்னர், மோட்டார் சைக்கிளில் சென்ற யான்சி மீது காரை வேகமாக மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், அவருடன் பயணித்த சிறுமி ஒருவர் படுகாயமடைந்து வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் தொடர்பாக பாலகுரு, சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பிர் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button