வெளிநாட்டுச் செய்திகள்
ஹோர்முஸ் நீரிணை விவகாரம்- ஈரானுக்கு டிரம்ப் 48 மணிநேர அவகாசம் !

ஹோர்முஸ் நீரிணை ஊடாக கப்பல்கள் தடையின்றி பயணிப்பதை உறுதிப்படுத்தத்
தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டிரம்பின் எச்சரிக்கையினைத் தொடர்ந்து ஒருவேளை ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்,
பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவின் அனைத்து எரிசக்தி உள்கட்டமைப்புகளும் இலக்கு வைக்கப்படும் என
ஈரான் இராணுவம் பதிலுக்கு எச்சரித்துள்ளது.




