உள்நாட்டு செய்திகள்

திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் சுனில் செனவி

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று புத்த சாசன மற்றும் கலாசார விவகார அமைச்சர் சுனில் செனவி தெரிவித்துள்ளார்.

தையிட்டி விகாரைக்கு எதிரான நேற்றைய போராட்டத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் சிலரின் கைதுகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது, இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்,

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதிக்கு பௌத்த கலாசாரத்தின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படுகின்றது, இது பதவி உயர்வு போன்ற விடயம் அல்ல, அத்துடன் தையிட்டி விகாரைப் பிரச்சனைக்கும் விகாராதிபதியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்விற்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை, ஆகவே மேற்படி விடயங்களை தொடர்புபடுத்த வேண்டாம் என அவர் மேலும் குறிப்பிட்டார் !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button